இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து..!
Aug 10, 2024, 05:30 IST
மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு டெல் அவிவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்களின் திட்டமிடப்பட்ட பயணம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.