குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை
Nov 16, 2024, 19:23 IST
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் இதுவரை இல்லாத அளவிற்கு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அருவி கரைகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை சீசன் இன்று துவங்கியதையடுத்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை அருவியில் நீராட வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்