குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை
Oct 25, 2024, 15:40 IST
தொடர்மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அருவிகளுக்கு தண்ணீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.