பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்!!
Feb 7, 2024, 10:53 IST
அதிமுகவை சேர்ந்த 14 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் பாஜகவில் இணையவுள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த 15 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளனர்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கு.வடிவேல், கந்தசாமி, சேலஞ்சர் துரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 11.30மணியளவில் பாஜகவில் இணைய உள்ளனர்.