×

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. பருவமழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருகின்றன. தமிழக அரசு சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த முகாம்களில் யாருக்கெனும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக உடல் சோர்வாக காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.