×

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் - வீரர்கள் பெயர் வெளியீடு..!

 

இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 பந்தயம், சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலைச் சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவு நேரத்தில் சாலை வழியாக நடத்தப்படும் கார் பந்தயம் இது என்பதால், மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்தது.

போட்டிக்கான பார்வைக் கட்டணமாக, "ப்ரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் ரூ.3,999, இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.6,999, கிரான்ட் ஸ்டாண்ட் 1 முதல் 5க்கான டிக்கெட் கட்டணம் ரூ.1,999 , கிரான்ட் ஸ்டாண்ட் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூபாய் 2,499, கோல்டு லவுஞ்ச் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 7,999, வார இறுதி நாட்களில் கோல்டு லவுஞ்ச் டிக்கெட் கட்டணம் ரூ.13,999, பிளாட்டினம் லவுஞ்ச் கட்டணம் ரூ.12,999 மற்றும் வார இறுதி நாட்களில் ரூ.19,999" எனவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.ஃபார்முலா 4 கார் பந்தயத்தில், இந்தியன் ரேசிங் லீக் போட்டியில் இந்திய வீரர்கள் ருஹானல்வா, அகில் ரபிந்திரா பங்கேற்க உள்ளனர். ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கார் பந்தய வீராங்கனை பேபினே உள்வென்ட், வீரர் நீல் ஜெயின் பங்கேற்க உள்ளார். 

இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயமான சென்னை ஃபார்முலா ஆகஸ்ட் 31 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆக. 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியன் ரேசிங் லீக் மெட்ராஸ் இன்டர்நேஷனால் சர்க்யூட்டில் போட்டிகள் துவங்க உள்ளது.