×

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு!

 

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி வருகிற மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலக்குழு பொதுச்செயலாளர் எஸ்.கர்ணன் மற்றும் தேசியச் செயலாளர்கள் எஸ்.சுரேஷ்தேவன், பி.எஸ்.தேவன் மற்றும் மாநில நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களை, இன்று (8.3.2024), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதுபோது, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உடனிருந்தார்.