மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?
Sep 1, 2024, 08:54 IST
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விலையை உயர்த்தியது.
இந்நிலையில், செப்டம்பர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது.