×

நயன்தாரா நடிச்சு சம்பாரிச்சா என்ன? கல்யாண வீடியோவை வித்து சம்பாரிச்சா என்ன?- காயத்ரி ரகுராம்

 

மதுரை ஒபுளாபடித்துறை அருகே அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா மாபெரும் பொது கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய காயத்ரி ரகுராம், “நயன்தாரா நடித்து சம்பாரிச்சா என்ன? கல்யாண வீடியோவை வித்து சம்பாரிச்சா என்ன? தனுஷோட சண்டை போட்டா என்ன போடலான என்ன? போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் வழக்கை திசை திருப்பத்தான் தி.மு.க இது போன்ற செய்திகளை பரப்புகின்றனர். போதைப்பொருட்கள் சாக்லெட் மாதிரி பள்ளிக்கு வெளியில் விற்கின்றனர். எங்கு பார்த்தாலும் டாஸ்மாக்... மக்களை குடிக்க வைத்தே சம்பாதிக்கின்றனர். சமூகநீதி,  சமூக நீதி எனக்கூறும் திமுக, சிறுபான்மையின மக்களுக்கு என்ன நல்லது செய்திருக்கிறார்கள்? வெறும் வாக்கு வங்கிக்கு மட்டுமே சிறுபான்மையின மக்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.  

என்ன தைரியம் இருந்தா சமூக நீதி பேசும் நீங்கள்... எடப்பாடி பழனிசாமி அவர்களை கரப்பான் பூச்சினு சொல்லுவீங்க? இதற்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும். மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார். வரி உயர்த்தப்பட்டுள்ளது, ஆனால் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இங்கு உள்ளது. ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை கொடுத்ததாக ஏமாற்றுகின்றனர். அனைத்து பெண்களுக்கும் அந்த தொகை செல்லவில்லை” என குற்றம் சாட்டினார்.