×

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கிய பரிசுப்பெட்டி! 

 

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு சார்பில் 'தடம்' என்ற பெட்டகம் பரிசாக அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியே ‘தடம்’. கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக அளித்துள்ளார்.


இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக 'ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு'-இன் 'தடம்' எனும் முக்கிய முன்னெடுப்பை அறிமுகம் செய்தபோது, அமெரிக்காவில் நான் சந்தித்த முதலீட்டாளர்களுக்குத் "தடம் – தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்" எனும் பெட்டியினை நினைவுப்பரிசாக வழங்கியதில் பெருமையடைகிறேன்.


மரபை நவீனத்துடன் இணைப்பதன் வழியாக, நமது திறன்மிகு கைவினைக் கலைஞர்களுக்கு உலகளாவிய இயங்குதளத்தையும் வாய்ப்புகளையும் வழங்கி, நமது பண்பாட்டு மரபு பாதுகாக்கப்படுவதையும் வளர்ச்சிபெறுவதையும் 'தடம்' உறுதிசெய்யும். நமது பண்பாட்டுப் பெருமையைக் கொண்டாவோம்; முன்னேற்றுவோம்!” எனக் குறிப்பொட்டுள்ளார்.