×

எல்லா வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறை கட்டாயம் வேண்டும் - ஜி.கே.மணி

 

கிராமங்கள் உள்ளிட்ட  எல்லா வீடுகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறை கட்டாயம் வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 

கிராமங்கள் உள்ளிட்ட  எல்லா வீடுகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறை கட்டாயம் வேண்டும். விழிப்புணர்வு தேவை. உலக கழிப்பறை தினம் இன்று. 
திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நோய் பரவல் அதிகம். கிராமப்புறங்களில் பெண்கள், குழந்தைகள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுவது வேதனையளிக்கிறது. விழிப்புணர்வு தேவை. கழிப்பறை வசதியில்லாமல் கிராமப்புற பெண்கள், மாணவிகள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்கள். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மலம் கழித்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்பும் சோப்பு போட்டு கை கழுவாமல் இருப்பதால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்கள் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் அறிக்கை வாயிலாக தெரிவிக்கின்றனர். கழிப்பறையை அவ்வப்போது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும்.