×

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி மறுப்பு- பேரவையில் பாமக வெளிநடப்பு

 

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு செய்தது.

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “சாதி வாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சினை. ஏற்கனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது.. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. ஒரு சில அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் உண்மையை பேச வந்தனர். ஆனால் சபாநாயகர் பேச விடவில்லை.


சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. அதுதொடர்பாக பேசினால் மத்திய அரசை கேளுங்கள் என ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர்” என்றார்.