×

கனமழையால் பல நூறு ஏக்கர் விளைநிலம் நீரில் மூழ்கி சேதம்.. இழப்பீடு வழங்குக- ஜி.கே.வாசன்

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்பொழது கனமழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம்ää திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் போன்ற இடங்களில் கன மழையால் பலநூறு ஏக்கர் நிலம் மழைநீரில் முழ்கி சேதம் அடைந்து விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பெய்து வரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் முழ்கி மிகவும் சேதம் அடைந்துள்ளது. மேலும் மழையால் கடந்த இரண்டு வாரமாக அறுவடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாலை மாவட்டம் ஆரணி பகுதியில் 1000 ஏக்கர் விவசாய நிலங்களும்ää செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் 500 ஏக்கர் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது. தமிழகம் ழுழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மேலும் சில நாட்கள் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


    
பல்வேறு இடங்களில் சாலைகளிலும்ää வீடுகளிலும் தண்ணீர் புகுந்து பொதுமக்களுக்கு மிகவும் சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு மக்களை காக்கும் பணியில் தமிழக அரசும்ää அதிகாரிகளும்ää உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்நெற்பயிர்கள் அறுவடை செய்ய தயாராக உள்ள நேரத்தில் இம்மழை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே விவசாயிகளை காக்கும் வகையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை அளித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.