×

“மருத்துவமனைக்குள் கையில் கட்டோடு சென்று அமரன் படம் எங்கே ஓடுகிறது?” என பிராங்க்- இருவர் கைது

 

அரசு மருத்துவமனைக்குள் கையில் கட்டோடு சென்று அமரன் படம் எங்கே ஓடுகிறது என கேட்டு ஊழியரை வெறுப்பேற்றிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பீர்முகம்மது (30) மற்றும் சேக் முகம்மது (27 ஆகிய இருவரும் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிபட்டது போல கட்டு போட்டுக்கொண்டு பிராங்க் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறாக செயல்படடதாகவும், வீடியோ எடுக்கும் பொழுது கேள்வி எழுப்பிய மருத்துவமனை  ஊழியரிடம்  அவதூறாக பேசியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.