×

GOAT... ஓப்பனிங் டே கலெக்ஷன் 126.32 கோடி!

 

விஜய்யின் ‘தி கோட்’ முதல் நாளில் உலக அளவில் ரூ.126 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம், யோகி பாபு, லைலா, சினேகா,  பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  இப்படம் தமிழ்,தெலுங்கு,  இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது.