×

அண்ணாமலை படத்தோடு ஆடு பலி - காவல்துறை விளக்கம்

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்தை ஆடு தலையில் மாட்டி பலியிட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கோவையில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.  அண்ணாமலை தோல்வியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரியில் திமுகவினர், அண்ணாமலையின் படத்தை ஆட்டின் தலையின் ஒட்டி, சாலையின் நடுவே அந்த ஆட்டை வெட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பிரமுகர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ஆடு வெட்டிய திமுக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை தரப்பில் விளக்கம் கேட்டது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்தை ஆடு தலையில் மாட்டி பலியிட்ட விவகாரத்தில் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் முதல் கட்டமாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.