×

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை!!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 3ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனையானது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனையானது.  

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 குறைந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து  ரூ. 5,830க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 46,640க்கு விற்பனையாகிறது.