×

வார இறுதி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. 

 

வார இறுதி நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.  

இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வந்தது. அந்தவகையில் கடந்த புதன்கிழமை ( ஜூலை 17) அன்று கூட அதிரடியாக சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.6,920க்கு விற்பனையானது.  இந்த நிலையில் நேற்றைய தினம்  கிராமுக்கு ரூ.30 என, சவரனுக்கு ரூ.240 என்கிற அளவில் சற்று குறைந்தது. 

இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று சவரனுக்கு ரூ.320 என அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது.  வார இறுதி நாளான இன்று 22 கிராம் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,835க்கு விற்பனையாகி வருகிறது.  அதேபோல் ஒரு சவரன்  தங்கத்தின் விலையானது நேற்றைய விலையான ரூ.55,000ல் இருந்து ரூ.320 குறைந்து  இன்று ரூ.54,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

இதேபோல் சென்னையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.97.75 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 1 ரூபாய் 75 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.96க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியானது ரூ.1,750 குறைந்து ரூ.96,000க்கு விற்பனையாகிறது.  வார இறுதி நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.