×

தங்கம் விலை  சவரனுக்கு ₹240 குறைந்தது!!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது.

சென்னையில்  நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.54,400 ஆக விற்பனையானது. 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து கிராம் ₹6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.