×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது!!
 

 

சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.  கிட்டத்தட்ட ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 55 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது.   நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ,145 குறைந்து ஒரு கிராம் ரூ.6700-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,730க்கு விற்பனையானது. இதன் மூலம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,840க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதன் மூலம் தங்கம் ஒரு கிராம் ரூ.6,710க்கு விற்பனையாகிறது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,680க்கும் விற்பனையாகிறது.