×

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

 

சென்னையில் தங்கம் விலை  மீண்டும் உயர்ந்து ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. 

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்று முன்தினம்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், நேற்றும்   தங்கம் விலை குறைந்தது. நேற்று  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனையானது.  ஒரு கிராமுக்கு  ரூ. 35 குறைந்து ஒரு கிராம்  தங்கம் ரூ. 6625-க்கும் விற்பனையாகி வருகிறது.  

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 328 உயர்ந்து ரூ. 53, 328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 41 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6666-க்கும் விற்பனையாகி வருகிறது.