×

சற்று குறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 

சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.  கடந்த 26ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54,040க்கும், கிராமுக்கு  ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6755க்கு விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து,   கிராம் ரூ.88க்கும், ஒரு கிலோ ₹88,000க்கும் விற்பனையானது. 27ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து,  ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனையானது. 

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 53,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,740க்கு விற்பனையாகிறது.