×

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை...சவரன் மீண்டும் ரூ.58,000ஐ தாண்டியது

 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து 102 ரூபாய்க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனையானது. தங்கம் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று கவலை அடைந்துள்ளனர்.