×

தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கலக்கம்!

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 
சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை, எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.  நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.78க்கும், கிலோவுக்க்கு 300 ரூபாய் உயர்ந்து 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.