×

இன்றும் உயர்ந்தது தங்கம் விலை...ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ஒரு நாள் ஏறுவதும், ஒருநாள் இறங்குவதுமாக உள்ளது தங்கம் விலை.  கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7,140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 101 ரூபாய்க்கும் ஒரு கிலோ ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.