அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த லிஸ்ட் வேணும்...ஆளுநர் அதிரடி உத்தரவு
புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் தொடர்பாக, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிக்கை கேட்டுள்ளார். அதிகாரி பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் இருந்தால் எதனால், அவவழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குருப் ஏ, பி அதிகாரிகள் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. சிலர் மீது துறைரீதியான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கலாகியுள்ளன. இருப்பினும் பலர் மீது விசாரணை தொடங்காமல் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
இதுபற்றி புதுச்சேரி அரசு சார்பு செயலர் கண்ணன் அரசு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கயில்,புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் குருப் ஏ, பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளின் விவரத்தை ஆளுநருக்கு விரிவாக தெரிவிக்க தகவல்கள் தேவைப்படுகிறது. அத்தகையவர்கள் விவரங்களை வரும் 31ம் தேதிக்குள் இமெயிலுக்கு (vigil@py.gov.in) அனுப்ப வேண்டும். அதில் அதிகாரி பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் இருந்தால் எதனால், அவவழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.