அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூ.1,000 - அரசாணை வெளியீடு
Updated: Mar 16, 2024, 10:42 IST
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் ₹1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூ. 1,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டது; மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித்தொகை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.