வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற அரசு ரூ.5,099 கட்டணமா?
கோவை வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற தமிழ்நாடு அரசு கட்டணம் விதித்துள்ளதாக பரப்பபடும் தகவல் முற்றிலும் திரிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மலையேற்றம் செய்வதற்கு ரூ.5,099 கட்டணத்தை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் வனத்துறை சார்பில் "டிரெக் தமிழ்நாடு" திட்டம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ், 13 கிமீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும்.
இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.