×

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு - மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு

 

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் இல்லை என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷின் உறவினர்கள் மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிண்டி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இதேபோன்று கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.