×

தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ்

 

சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கினார்.அப்போது வழக்கறிஞர் ஒருவர் சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாகவும், இதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென  முறையீடு செய்தார். தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்தார்.