டிசம்பர் முதல் வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகள்!!
Updated: Nov 20, 2023, 09:56 IST
தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 -டிச. 22ம் தேதி வரையும், 6-10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.11- டிச.21 ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை எமிஸ்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்வதில் இடர்பாடு ஏற்பட்டால் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.