இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்ட HDFC வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்
இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதற்காக ஹெச்டிஎப்சி வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் சில விதிகளை மீறியதற்காகவும், டெபாசிட் மீதான வட்டி விகிதம், வாடிக்கையாளர் சேவை, கேஒய்சி, விவசாயிகளுக்கான கடன் ஆகியவற்றில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காகவும் ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆர்.பி.ஐ-ன் சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தகுதியற்ற நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு வைப்புக் கணக்குகளைத் திறந்து, வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 7 மணிக்கு முன்பும் தொடர்புகொண்டதற்காக வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 46 (4) உடன் படிக்கப்பட்ட பிரிவு 47 A (1) (c) இன் விதிகளின் கீழ் RBI க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.