×

செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணை

 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17ஆவது முறையாக நீடிக்கப்பட்டு  31ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜியின்   ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார். தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாக கூறி ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார் செந்தில்பாலாஜி.