×

 'பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்து’ - தவெக தலைவர் விஜய்.. 

 

இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  முன்னதாக  4 முறை குஜராத் மாநில முதவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். தொடர்ந்து அரசியல் களத்தில் கோலோச்சி வரும் பிரதமர் மோடிக்கு , பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். “பிரதமர் மோடி ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.