×

சென்னையில் அதிகாலை முதலே வெளுத்து வாங்கும் மழை

 

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கிண்டி, அடையாறு, ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, திருவானியூர்,மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழுந்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

புயல் இன்றிரவில்  இருந்து அதிகாலைக்குள் கரையை கடக்க வாய்ப்பு  உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை 12 செ.மீ. மழை பெய்துள்ளது. புயல் எந்தளவு தாமதமாக கரையை கடக்கிறதோ அந்தளவுக்கு மழை அதிகரிக்கும்எனவும், சென்னையில் இன்று மாலைக்குபின் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  மரக்காணம் - மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கும் எனவும், சென்னையில் அடுத்த 18 மணி
நேரம் வரை மழை நீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.