"ஹேமந்த் சோரன் கைது பாஜகவின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - முதல்வர் ஸ்டாலின்
பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொண்ட ஹேமந்த் சோரனின் மன உறுதி பாராட்டிற்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்தது. சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையின் கஸ்டடியிலேயே ஆளுநர் மாளிகைக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடி இனத் தலைவரான ஹேமந்த் சோரனை பாஜக துன்புறுத்துகிறது;
பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொண்ட ஹேமந்த் சோரனின் மன உறுதி பாராட்டிற்குரியது;
பாஜகவின் மிரட்டல் தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.