×

10ஆம் வகுப்பு படித்துவிட்டு மூல நோய்க்கு அறுவை சிகிச்சை- கைது செய்த அதிகாரிகள்

 

ஓசூரில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு கிளீனிக்கில் மூல அறுவை சிகிச்சை செய்து வந்த போலி மருத்துவர் சிக்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் அண்மை தினங்களாக போலி மருத்துவர்கள் கிளீனிக் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சம்பவங்களால் மருத்துவதுறை அதிகாரிகள் போலி மருத்துவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் 10ம் வகுப்பு மற்றும் டி பார்ம் படித்த இரண்டு பெண்கள் கிளீனிக்கில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஓசூர் ராம் நகரில், ஆயுர்வேதிக் மூலம் கிளீனிக் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சை செய்து வந்த போலி மருத்துவர் மெகபூப் வலி என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஞான மீனாட்சி, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜூவ்காந்தி ஆகியோர் நடத்திய அதிரடி ஆய்வில் இந்த போலி மருத்துவர் சிக்கி உள்ளார். தொடர்ந்து போலி மருத்துவர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.