சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
Aug 18, 2024, 14:30 IST
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, விரைவில் சேவை தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நீல நிற லைனில் மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்ட்ரல்- பரங்கிமலை இடையிலான மெட்ரோ ரயில் சேவையும் வழக்கம்போல் இயங்கிவருகிறது.