×

மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறையில் இன்று அதிகாலை முதல் அவ்வப்போது தொடர்ந்து விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்தது. காலை 10 மணி முதல் மழை முழுவதும் ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. திடீர் கனமழையின் காரணமாக சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் தொடர் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.