×

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெங்கல் புயல் எதிரொலி காரணமாக நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக புதுச்சேரி கடல் இன்று, வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு செல்ல பொதுமக்கள்- சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வருபவர்களை  அப்புறப்படுத்தி வருகின்றனர்.