×

விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

காரைக்கால் மாமல்லபுரம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் உருவாக மேலும் தாமதமாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த நில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை எதிரொலியால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 29) ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.