பொங்கலுக்கு பதில் இட்லி வாங்கி கொடுத்ததால் மனைவி மீது கோபம்! கணவன் தற்கொலை
பொங்கலுக்கு பதில் மனைவி இட்லி வாங்கி கொடுத்ததால் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்த பாண்டி செல்வி(58). இவரது கணவர் சண்முகசுந்தரம்(60) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். சண்முகசுந்தரம் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலைய சரியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். பாண்டி செல்வி பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பூ வியாபாரம் செய்து விட்டு வீட்டிற்கு வரும் போது கணவர் பொங்கல் வாங்கி வர சொன்ன இருக்கிறார். ஆனால் மனைவி இட்லி வாங்கி வந்ததால் சண்முகசுந்தரம் கோபமடைந்திருக்கிறார். மனைவி நாளைக்கு பொங்கல் வாங்கி வருவதாக கூறியுள்ளார். ஆனால் கணவர் நான் சொல்வதை கேட்கமாட்டியா என கோபத்தில் மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு விட்டார். உடல் நல குறைவு ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமணைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றானர்.