"தேச நலன் சார்ந்து பாமக முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" - அண்ணாமலை
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதற்கு அண்ணாமலை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi
அவர்கள் கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, நமது மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு
@Murugan_MoS அவர்களுடன், தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, பாமக நிறுவனர் ஐயா திரு @drramadoss அவர்களையும், பாமக தலைவர், அண்ணன் திரு @draramadoss அவர்களையும் நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தோம்.
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ஐயா திரு
@drramadoss அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.