×

“நானே ஆள செட் பண்ணி என் நகைக்கடையில கொள்ளையடிக்க சொன்னேன்”... உரிமையாளரின் திருட்டு நாடகம்

 

திருமுல்லைவாயல் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் திருப்பமாக கடையின் உரிமையாளர் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் உள்ள நகைக்கடையில் கொள்ளைப் போனதாக நாடகம் நடத்திய நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ம் தேதி மாலை மர்ம நபர்கள் இருவர் நகைக் கடைக்குள் நுழைந்து கத்தியால் குத்தி, தாக்கிவிட்டு 50 சவரன் கொள்ளையடித்துச் சென்றதாகக் கடை உரிமையாளர் புகார் அளித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட மர்ம நபர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் திட்டமிட்டு நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமார் அளித்த ஐடியாவில், கடையில் இருந்த போலியான நகைகளைக் கொள்ளை அடித்ததாகவும், அதை ரயில் நிலையம் அருகில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடை உரிமையாளர் ரமேஷ்குமார் கடனில் சிக்கியுள்ள நிலையில் கொள்ளை நாடகம் அரங்கேற்றப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.