×

இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார்

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 47


இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி திரை பின்னணி பாடகியாவார். இவர் ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பவதாரணி, ஒரு விளம்பர நிறுவன நிர்வாகியாவார். இவர் சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர். அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டான பாடல். மேலும் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய  ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும்.