இமானுவேல் சேகரனாரின் 66 வது நினைவு நாள் - தினகரன் மரியாதை
இமானுவேல் சேகரனாரின் 66 வது நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி, பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான திரு. இமானுவேல் சேகரனாரின் 66வது நினைவுநாள், வரும் 11.09.2023, திங்கட்கிழமை அன்று கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அன்று காலை 10.00 மணி அளவில் மலரஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்நிகழ்விற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், வார்டு / வட்டக் கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என்று குறிப்பிட்டுள்ளார்.