×

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் - ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு 

 

இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவருமான இம்மானுவேல் சேகரன்  நினைவு தினத்தையொட்டி அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துதல் தொடர்பாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான திரு. இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளான 11-09-2023 (திங்கட்கிழமை) அன்று காலை 10-00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்

இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்
1. திரு. ஆர். தர்மர், M.P., அவர்கள்
2.திரு. பி. அய்யப்பன், M.L.A., அவர்கள்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
3. திரு. மருது அழகுராஜ், B.B.A., அவர்கள்
 கழக கொள்கை பரப்புச் செயலாளர்
4. திரு. A. சுப்புரத்தினம், M.A., B.L., Ex. M.L.A., அவர்கள், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
5. திரு. R. கோபாலகிருஷ்ணன், B. Com., Ex. M.P., அவர்கள் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
6.திரு.A. மனோகரன், Ex. M.L.A. அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்
7.திரு. மு. சேதுராமன், M.A., B.L., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்
8.திரு. G.R. ராமமூர்த்தி, B.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்

9.திரு. K. முருகேசன், B.A., அவர்கள்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
10.திருமதி இரா. பாண்டியம்மாள், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
11.திரு. V.R. ராஜ்மோகன், B.E., அவர்கள் கழக இளைஞரணிச் செயலாளர்
12. திரு. K.R. அசோகன், B.A., அவர்கள்,
சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்
13.திரு. மார்க்கெட் P.S. கண்ணன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
14. திரு. M.P. முருகையாபாண்டியன், B.Sc., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்
15.திரு. N. மாரிமுத்து அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்
16.திரு. வைகை பாலன் அவர்கள்,
திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
17.திரு. ப. சுப்பிரமணியன் அவர்கள்,
திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
18.திரு. S.B. பசும்பொன், B.E., அவர்கள், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
19.திரு. அ. தெய்வம் அவர்கள், விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்

20.திரு. J. பாலகங்காதரன், B.Sc., B.L., Ex. M.L.A. அவர்கள், விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

21.திரு. S.S. கதிரவன், B.Com., அவர்கள்,
விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
22.திருமதி J. ஸ்வர்ணா அவர்கள்,
தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்
23.திரு. N. பாலசுப்பிரமணியன் அவர்கள்,
இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொருளாளர்
உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.
மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர். தர்மர், M.P. அவர்கள் மேற்கொள்வார்.

மேற்படி நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.