×

14 ஆண்டுகளுக்கு பின் மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. 

குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு,தெற்கு மற்றும் அம்மன் கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணிக்குள் பாலாலயம் நடைபெறவுள்ளது.

12 மாதங்களும் திருவிழா நடைபெறும் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், குறிப்பாக சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.