×

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் - மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 
 

 

கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று  முதல் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்களை வெளியிட்டது. 

கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் அனைத்து வாகனங்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9442255737 என்ற கைபேசி எண்ணிலோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ்(ePass) பதிவு செய்து வர வேண்டும். பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் (Local ePass ) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண், 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.