×

இந்திய ஒலிம்பிக் ஹவுஸை ஆக்கிரமித்த அம்பானியின் குடும்ப பெருமைகள்!

 

நாட்டின் பாரம்பரியம் பெருமையை பேச அமைக்கப்படும் இந்திய ஒலிம்பிக் ஹவுஸில் அம்பானியின் குடும்ப பெருமைகளே பெரிதும் இடம்பெற்றுள்ளன.

பாரிஸில் ஒலிம்பிக் நடைபெறும் வளாகத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் என்று ஒலிம்பிக் ஹவுஸ் உண்டு. பல்வேறு நாடுகளும் அதன் பாரம்பரியத்தின் அடிப்படையில் விடுதிகளை அமைத்துள்ளன. வளர்ந்த நாடுகளின் பழைய நாட்டுப்புற கட்டமைப்பு, பாரம்பரிய இசை, நடனம், உணவுப் பழக்கங்கள் என்று ஒவ்வொரு நாட்டு விடுதியிலும் அவரவர் நாட்டு மக்களை மகிழ்விக்க செய்யும் கலை அம்சங்கள் நிறைந்துள்ளன.